×

பொதுமக்கள் வலியுறுத்தல் பெரம்பலூர் பாலக்கரையில் துர்நாற்றத்துடன் பொங்கி வழியும் சாக்கடை நீர்

பெரம்பலூர், டிச.21: பெரம்பலூர் பாலக்கரையில் துர்நாற்றத்துடன் பொங்கி வழிந்த பாதாள சாக்கடை திட்டக்குழாயால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாவட்டத் தலைநகரமாக விளங்கும் பெரம்பலூர் 2ம் நிலை நகராட்சி அந்தஸ்து கொண்டது. இந்த நாகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக் கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நகரின் சாலைக ளுக்கு நடுவே, சாலையோரங்களில் பதிக்கப்பட்ட குழாய்கள் கனமழை காரண மாகவும், எங்காவது ஏற்படும் அடைப்பு காரணமாகவும் மேன்ஹோல் எனப்படும் திறப்பு வழியாக கழிவுநீர் பொங்கும். தற்போது மழை பெய்யவில்லை. இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக பாலக்கரை ரவுண்டானா கிழக்கு பகுதியில் மயானத்தை ஒட்டியுள்ள சாலையில் 2 இடங்களில் மேன்ஹோல்கள் வழியாக கழிவுநீர் பொங்கி சாலையில் தாங்க முடியாத துர்நாற்றத்துடன் ஆறுபோல ஓடி அருகிலுள்ள வாய்க்கலை நிரப்பி வருகிறது. இதனால் அவ்வழியே நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் தொற்றுநோய் பாதிப்புகள் உண்டாகுமோ என அச்சப்படுகின்றனர். எனவே பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து விரைந்து சீரமைத்து தொற்றுப் பரவாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Perambalur Balakkarai ,
× RELATED திம்மூர் கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்